×

அங்கக சாகுபடியாளர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

ஈரோடு, அக். 30: ஈரோடு மாவட்டம், கோபியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் அங்கக சாகுபடியாளர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் துவக்க விழா நேற்று நடைபெற்றது.  விழாவுக்கு வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவரும், முதுநிலை விஞ்ஞானியுமான அழகேசன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்து, பயிற்சியின் முக்கியத்துவம் மற்றும் சுய வேலைவாய்ப்பு குறித்து விளக்கம் அளித்தார்.

வேளாண் அறிவியல் நிலையத்தின் தோட்டக் கலைத்துறை தொழில்நுட்ப அலுவலர் பச்சியப்பன் பங்கேற்று, அங்கக விவசாயம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த பயிற்சியில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 25 கிராமப்புற இளைஞர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியானது வருகிற நவம்பர் மாதம் 26ம் தேதி வரை ஒரு மாதத்திற்கு நடைபெறும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

 

Tags : Organic Farmer Skill Development Training Camp ,Erode ,Agricultural Science Institute ,Gopi, Erode district ,Tamil Nadu Skill Development Corporation ,
× RELATED இ-சேவை மையத்தில் லேப்டாப் திருடியவர் கைது