×

மோடி பார்க்க மென்மையானவர்; ஆனால் மிக கடினமான நபர்: பிரதமரை வித்தியாசமாக புகழ்ந்த டிரம்ப்!

வாஷிங்டன்: இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள போவதாக அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். தென்கொரியாவின் கியோங்ஜு நகரில் நடைபெற்ற ஆசிய பசுபிக் பொருளாதாரம் மாநாட்டில் உரையாற்றிய டிரம்ப், இந்தியாவும் – பாகிஸ்தானும் சண்டையிட்டபோது இருநாட்டு தலைவர்களுடனும் தான் பேசியதாகவும், வர்த்தகம் செய்யப்போவது இல்லை என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

பிரதமர் மோடி பார்க்க மென்மையானவர்.. ஆனால் அதே சமயம் மிக கடினமான நபர் என்று குறிப்பிட்ட டிரம்ப், தான் பேசிய பின்னரும் தாங்கள் சண்டையிடுவோம் என்று கூறியதாகவும், இரண்டு நாட்களுக்கு பின் இருவரும் தொலைபேசியில் அழைத்து தங்களுக்கு புரிகிறது என்று கூறி சண்டையை நிறுத்தியதாகவும், இதனை ஜோ பைடன் செய்திருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?, நிச்சயம் இல்லை என்றும் டிரம்ப் தெரிவித்தார். இந்தியா – பாகிஸ்தான் சண்டையை நிறுத்தாமல் இருந்திருந்தால் 250% வரி விதிப்பை எதிர்கொண்டு இருக்க நேரிடும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடி மீது முகுந்த மரியாதையையும், அன்பும் கொண்டுள்ளதாக தெரிவித்த டிரம்ப், பிரதமர் மோடியுடன் சிறந்த உறவை கொண்டுள்ளதாகவும், அவர் தனது நல்ல நண்பர். விரைவில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள போவதாகவும் குறிப்பிட்டார்.

Tags : Modi ,Trump ,Washington ,US ,President ,Donald Trump ,India ,Asia-Pacific Economic Conference ,Gyeongju, South Korea ,Pakistan ,
× RELATED ஆஸ்திரேலிய கடற்கரையில் யூதர்கள்...