எலிகளால் 60 சதவீத பயிர்கள் சேதம் வயல்களில் கள ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்

தஞ்சை, டிச. 29: ஒரத்தநாடு அடுத்த வடசேரி பகுதியில் எலிகளால் 60 சதவீத பயிர்கள் அழிந்துவிட்டதால் வேளாண்துறை மூலம் கள ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென தஞ்சை கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

தஞ்சை கலெக்டர் கோவிந்தராவிடம் ஒரத்தநாடு தாலுகா வடசேரி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதில் வடசேரி பகுதியில் சம்பா பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிரில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் எலி தொல்லை அதிகமாகியுள்ளது. இப்பகுதியில் 60 சதவீத பயிர்கள் எலிகளால் வெட்டி அழிக்கப்பட்டுள்ளது. எலி கிட்டி வைத்தும், விஷ மருந்து வைத்தும் எலிகளை ஒழிக்க முடியவில்லை. இதனால் விவசாயிகள் பெருத்த இழப்பை சந்தித்துள்ளனர். ஒவ்வொரு விவசாயியும் ரூ.1,000 முதல் ரூ.65 ஆயிரம் வரை எலிகளை ஒழிக்க செலவு செய்தும் எந்த பயனும் ஏற்படவில்லை. எனவே வேளாண் கள பணியாளர்கள் நேரடியாக கள ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க கலெக்டர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: