×

பாம்பன் மீனவர்கள் 30 பேருக்கு அக்.23 வரை சிறை

கொழும்பு: பாம்பன் மீனவர்கள் 30 பேரை அக்.23 வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்றிரவு நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 4 படகுகளில் இருந்த 30 பேரை இலங்கை படை கைது செய்தது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 30 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. 30 மீனவர்களை அக்.23 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Colombo ,Neduntheevu ,Neduntheevu… ,
× RELATED சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் மெட்ரோ...