×

24 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 74,861 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 31,802 பேர் தலைமுடி காணிக்கை வழங்கினர். கோயிலில் உள்ள உண்டியல்களில் ரூ.3.93 கோடியை காணிக்கை செலுத்தியுள்ளனர்.

இன்று காலை வைகுண்டம் காம்பளக்சில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியதால் பக்தர்கள் சிலாதோரணம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் தரிசனம் செய்ய 24 மணி நேரமாகும். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்றவர்கள் சுமார் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

Tags : Tirupati ,Tirumala ,Lord Shiva ,Tirupati Ezhumalaiyan Temple ,Vaikuntam Complex… ,
× RELATED டெல்லியில் செங்கோட்டை அருகே கார்...