×

பிப்ரவரி 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால் ஒன்றிய பட்ஜெட் தாக்கல் எப்போது?

புதுடெல்லி: ஒன்றிய பட்ஜெட் வழக்கமாக பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் நிலையில், இந்தாண்டு ஞாயிற்றுகிழமை வருவதால் அன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா? அல்லது வேறு நாளில் தாக்கல் செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.கடந்த 2017ம் ஆண்டு முதல் தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு(2026) பிப்ரவரி 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனால் அன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.நாடாளுமன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட்டால் அன்றைய தினம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். பிப்.1ம் தேதி ஞாயிற்றுகிழமை என்பதால் பட்ஜெட் தாக்கல் பிப்.2ம் தேதிக்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவிடம் கேட்ட போது, ‘‘ இது போன்ற முடிவுகளை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு தகுந்த நேரத்தில் எடுக்கும்’’ என்றார்.
ஒன்றிய அரசு அதிகாரி கூறுகையில்,பொது பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு என எங்களுக்கு நிலையான நாளை வைத்துள்ளோம்.ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்ற நடைமுறை ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்டது என்றார். கடந்த 2017க்கு முன்பு, பட்ஜெட் பிப்ரவரி கடைசி நாளில் சமர்ப்பிக்கப்பட்டது. 2017 ம் ஆண்டில் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, புதிய நிதியாண்டு தொடங்குவதற்கு முன்பே, பிப்ரவரி 1 ம் தேதி பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து மார்ச் மாத இறுதிக்குள் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படும் நடைமுறையைத் தொடங்கினார்.

Tags : Union Budget ,New Delhi ,
× RELATED நேஷனல் ஹெரால்டு வழக்கு; சோனியா-ராகுல் விடுதலையை எதிர்த்து ஈடி அப்பீல்