×

நேஷனல் ஹெரால்டு வழக்கு; சோனியா-ராகுல் விடுதலையை எதிர்த்து ஈடி அப்பீல்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் விடுதலையை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளது. நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகையை ரூ.50 லட்சத்திற்கு வாங்கியதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் ஆகியோர் ரூ. 2,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை பறித்ததாக பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, 2014ல் வழக்கு தொடர்ந்தார்.

டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையை நிராகரித்த நீதிமன்றம், ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று கருதி குற்றப்பத்திரியையை நிராகரித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Tags : National Herald ,ED ,Sonia-Rahul ,New Delhi ,The Enforcement Directorate ,Delhi High Court ,Sonia ,Rahul ,Congress ,president ,Lok Sabha ,Rahul Gandhi ,National ,
× RELATED காரை திறந்தபோது வாகனம் மோதியதால்...