ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கை தலைஞாயிறில் மக்கள் திட்டமிடுதல் இயக்க கூட்டம்

வேதாரண்யம், டிச. 24: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் மக்கள் திட்டமிடுதல் இயக்க கூட்டம் 15 ஊராட்சிகளில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் செல்வராஜ், மலர்விழி ஆகியோர் தலைமை தாங்கினர். தலைஞாயிறு ஊராட்சியில் புத்தூர், வெள்ளப்பள்ளம், வடுவூர், அவரிக்காடு உள்ளிட்ட 12 ஊராட்சிகளில் மக்கள் திட்டமிடல் இயக்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கிராமத்திற்கு தேவைப்படும் திட்டங்களை மக்களை வைத்து தயார் செய்து பின் அவர்களுடன் கலந்தாலோசனை நடைபெற்று கிராம சபை ஒப்புதல் பெற்று பின் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதற்காக மக்களிடம் கருத்து கேட்டு திட்டங்களை நிறைவேற்றுவது என்பது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் திட்ட பயிற்சி வனிதா, மணிமேகலை, அன்னபூரணி மற்றும் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

காரைக்கால்,டிச.24: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி உதவியை புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன் வழங்கினார். திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் புதுச்சேரி அரசு சமூக நலத்துறையின் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட 13 பயனாளிகளுக்கு 27,500 ரூபாய்க்கான காசோலைகளை புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் கமலக்கண்ணன் வழங்கினார்.

Related Stories: