×

பைக்கில் மதுபாட்டில் விற்ற முதியவர் கைது

சின்னசேலம், செப். 24: சின்னசேலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட நைனார்பாளையம் கூட்ரோடு பகுதியில் பைக்கில் மதுபாட்டில் விற்பதாக கீழ்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் அந்த பகுதியில் ரெய்டு செய்தனர். அப்போது கடலூர் மாவட்டம் வடபாதி கிராமத்தை சேர்ந்த ராயபிள்ளை(60) என்பவர் பைக்கில் வைத்து மதுபாட்டில்கள் விற்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவரிடமிருந்து 19 மதுபாட்டில்கள், பைக், ரூ.200 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ராயபிள்ளையை கைது செய்தனர்.

Tags : Chinnasalem ,Kilkuppam ,Nainarpalayam Kooroad ,Sub-Inspector ,Harikrishnan ,North-West of Cuddalore district… ,
× RELATED செல்போன் டவரில் திருட முயன்றவர் கைது