ராமேஸ்வரம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

ராமேஸ்வரம், டிச.22:  ராமேஸ்வரம் தீவு பகுதியில் மின் இணைப்பில் இன்சுலேட்டர்கள் பொருத்தும், மாற்றும் பணி நடைபெறவுள்ளதால் இன்று ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதியில் காலை முதல் மாலை வரை மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. மண்டபம் துணை மின் நிலையத்தில் இருந்து ராமேஸ்வரம் துணை மின்சார நிலையத்திற்கு வரும் மின் இணைப்பு லைனில் பாலிமர் இன்சுலேட்டர்கள் பொருத்தும் பணி இன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி ராமேஸ்வரம் மின்சார நிலையத்திற்கு உட்பட ராமேஸ்வரம் நகர், வேர்கோடு, புதுரோடு, வடகாடு, தங்கச்சிமடம், நாலுபனை ஆகிய பகுதியில் இன்று காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என ராமேஸ்வரம் உதவி பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories: