கோவிலாங்குளம் வழித்தடத்தில் 10 மாதமாக பஸ்கள் நிறுத்தம் கிராம மக்கள் அவதி

சாயல்குடி, டிச.21: கடலாடியிலிருந்து கோவிலாங்குளம் வழியாக கமுதி செல்ல சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவுள்ள சாலை உள்ளது. இச்சாலை அமைக்கப்பட்டு 15 வருடங்களாக மராமத்து செய்யாமல் சேதமடைந்து கிடந்தது.கடந்த 2018ல் கடலாடியிலிருந்து 4 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மலட்டாறு பாலம் வரை புதிய சாலை அமைக்கப்பட்டது. இதுபோன்று கோவிலாங்குளத்திலிருந்து கொம்பூதி வரை 7 கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் கொம்பூதியிலிருந்து மோயங்குளம் வழியாக மலட்டாறு பாலம் வரையிலுள்ள 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய சாலை அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடலாடியிலிருந்து கோவிலாங்குளம் வரை செல்லும் இச்சாலையை மங்களம், ஆப்பனூர் தெற்கு கொட்டகை, கொம்பூதி, காத்தாகுளம், மோயங்குளம், ஆரைக்குடி, ஒச்சதேவன்கோட்டை, பறையங்குளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

இச்சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து குண்டும், குழியுமாக இருக்கிறது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலையிலுள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சேறும், சகதியுமாக சாலை இருப்பதால் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அவலநிலை உள்ளது.மேலும் இச்சாலையின் வழியாக கமுதியிலிருந்து கடலாடிக்கு ஒரே ஒரு அரசு பஸ் இயக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக பஸ் நிறுத்தப்பட்டது. ஆனால் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டும், இந்த சாலை சரியில்லாத காரணத்தை காட்டி 10 மாதமாக அந்த பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியிலுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும், மருத்துவம் உள்ளிட்ட அவசர

Related Stories: