ஆறுமுகநேரி, சாத்தான்குளம் கோயில்களில் மார்கழி பஜனை துவக்கம்

ஆறுமுகநேரி, டிச.17: ஆறுமுகநேரி கோயில்களில் மார்கழி மாத பஜனை துவங்கியது. ஏராளமான சிறுவர், சிறுமியர் பங்கேற்றனர். ஆறுமுகநேரி லட்சுமிமாநகரம் நடராஜர் கோயிலில் நேற்று அதிகாலையில் சிறப்பு பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து திருப்பாவை, திருவெம்பாவை, வீதிபாராயணய உலா துவங்கியது. இதில் ஏராளமான சிறுவர், சிறுமியர்கள் பங்கேற்றனர். நடராஜ தேவார பக்த ஜன சபையின் செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஆறுமுகநேரி விநாயகர் கோயில் தெரு சைவ சிந்தாந்த சங்கத்தின் சார்பிலும் பஜனை வீதிஉலா தொடங்கியது. சங்க தலைவர் சங்கரலிங்கம், செயலாளர் முருகன், பொருளாளர் கற்பகவிநாயகம் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல் பேயன்விளை வடபத்திரகாளி அம்மன் கோயிலில் பஜனையை இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார். பஜனை குழு தலைவர் ராஜாமணி வரவேற்றார். தொடர்ந்து திருப்பாவை, திருவெம்பாவை, வீதிபாராயணய உலா துவங்கியது. இதில் ஏராளமான சிறுவர், சிறுமியர்கள், பெரியவர்கள் பங்கேற்றனர்.

முன்னாள் தர்மகர்த்தா பரமகுரு, பேயன்விளை இந்து துவக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அழகேசன், கல்வி கமிட்டி உறுப்பினர் தனசேகரன், தர்மகர்த்தாகள் பொன்மாடசுவாமி கோயில்  ராஜேஷ், தர்மகுட்டி சாஸ்தா கோயில் கல்யாணகுமார், சென்னை தொழிலதிபர்கள் ஜெயராமபாண்டியன், சசிகுமார், பால்ராஜ், ராஜகுமார், சிவபாலன், பாபு, கிருஷ்ணசிங், முருகேசன், பாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர். சாத்தான்குளம்: மார்கழி மாதப்பிறப்பையொட்டி தச்சமொழி முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து 40 பேருக்கும் மேற்பட்ட பஜனை குழுவினர் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடிய படி ஊர்வலமாகச் சென்று கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர். வெங்கடேஸ்வரபுரம் சுந்தராட்சி அம்மன் கோயில், சாத்தான்குளம் புளியடி தேவி மாரியம்மன் கோயில், விஜயராமபுரம் தேவி முத்தாரம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பஜனை ஊர்வலத்தில் சிறுவர், சிறுமிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

Related Stories: