×

பூ வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு: வாலிபர் கைது

திருவள்ளூர், செப்.2: திருவள்ளூர், கேகேஆர் மில்லியணம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பூ வியாபாரி ஆனந்தன் (45). இவர் கடந்த 29ம் தேதி சிங்கபெருமாள்கோவில் பகுதியில் உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார். நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 3.5 சவரன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி பாத்திரம் ரூ.47 ஆயிரம் பணம் திருடுபோனது தெரிய வந்தது.

இதுகுறித்து திருவள்ளூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதில் பண்ட்ருட்டி பகுதியைச் சேர்ந்த மணிபாலா (26) என்பவரை சென்னை சூளைமேடு பகுதியில் வைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து 410 கிராம் வெள்ளி மற்றும் ரூ.4,020 பறிமுதல் செய்தனர்.

Tags : Thiruvallur ,Florist ,Anandan ,KKR Million Nagar ,Singaperumalkovil ,
× RELATED ஆவடி சத்தியமூர்த்தி நகர் அரசினர்...