சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய கராத்தே மாஸ்டர் கெபிராஜ் மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் வழக்கில் கெபிராஜுக்கு 10 ஆண்டு சிறையுடன் ரூ.50,000 அபராதம் விதித்து சென்னை மகளிர் கோர்ட் தீர்ப்பு அளித்திருந்தது. இதையடுத்து தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி கெபிராஜ் ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில், கராத்தே மாஸ்டர் கெபிராஜ் மனுவுக்கு பதில் அளிக்க காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
