×

ஹேன்ஸ் ரோவர் பப்ளிக் பள்ளியில் நினைவாற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சி

பெரம்பலூர், ஆக.14: கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில், மாணவர்களின் நினைவாற்றலை பெருக்குவதற்காக, ஹேன்ஸ் ரோவர் பப்ளிக் பள்ளியில் “Memory Skills – The Art of Remembering” என்னும் தலைப்பில் சிறப்பு பயிற்சி பட்டறை நேற்று (13ம் தேதி) சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, ரோவர் கல்விக் குழுமத்தின் மேலாண்மைத் தலைவர் டாக்டர் வரதராஜன் தலைமையில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் ஷோபனா மற்றும் துணை முதல்வர் விஜயசாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தமிழ்செல்வன், தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நினைவாற்றல் பயிற்சி நிபுணர், கைட் பிரெய்னிங் இன்ஸ்டிட்யூட், திருச்சி, கலந்து கொண்டு, நினைவாற்றல் வளர்ச்சி மற்றும் கவன ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் வழிமுறைகளை சுவாரஸ்யமான செயல்முறைகளுடன் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினார். மேலும், அறிவைப் பெறுவது மட்டுமன்றி, அதை நினைவில் உறுதியாகப் பதிவு செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர்.

 

Tags : Hans Rover Public School ,Perambalur ,
× RELATED தேர்வு மையத்தில் ஐஜி, எஸ்பி ஆய்வு; கடும் பனிப்பொழிவு குளிரால் மக்கள் அவதி