திருச்சுழி திருமேனி நாதர் கோயிலில் தூய்மைப்பணி

திருச்சுழி. டிச. 7:  திருச்சுழியில் உள்ள திருமேனிநாதர் ஆலயம் 14 சிவத் திருத்தலங்களில் 11வது திருத்தலமாகும். மேலும் மகான் ரமணமகரிஷி பிறந்த புண்ணிய பூமியான திருச்சுழியில் அருள்பாலித்துள்ள  துணைமாலை அம்மன் சமேத திருமேனிநாதர் கோயில் தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில், தூத்துக்குடி திருமந்திர நகரைச் சேர்ந்த உழவாரத் திருக்குழு என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் 60க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் ஆலய வளாகம் முழுவதிலும் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: