தூத்துக்குடியில்இந்தியா-கானா வர்த்தகபரிமாற்ற கருத்தரங்கு

தூத்துக்குடி, ஏப்.5:தூத்துக்குடியில் அகில இந்திய வர்த்தக சங்கம் சார்பில் இந்தியா – கானா இடையேயான வர்த்தகப் பரிமாற்றம் பற்றிய கருத்தரங்கு நடந்தது. தூத்துக்குடியில் உள்ள அகில இந்திய வர்த்தக தொழில் சங்க கூட்ட அரங்கில் இந்தியா – கானா இடையேயான வர்த்தக பரிமாற்றம் பற்றிய சிறப்புக் கூட்டம் மற்றும் கலந்துரையாடல் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் தமிழரசு தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் சங்கர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் பங்கேற்றார். கானாவிலிருந்து அஹாபோ மண்டல அமைச்சர் ஜார்ஜ் யாவ் போக்யா, கானாவின் கிழக்கு மண்டல அமைச்சர் க்வசியனர கெய்ன், தலைமை பொருளாதார ஆலோசகர் நானா டிஊம், கானாவின் இந்திய ஆப்பிரிக்கா வர்த்தக சபை உறுப்பினர் பீட்டர் மென்சா மற்றும் கிங்டெம் எக்ஸிம் குழுமத் தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் ராஜாமணி ஆகியோர் பங்கேற்றனர்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எஸ்பி பாலாஜி சரவணன் பேசியதாவது, தூத்துக்குடி துறைமுகம் இந்தியாவின் முக்கிய துறைமுகமாக விளங்குகிறது. கானா பகுதியும் இந்தியாவில் உள்ள தூத்துக்குடியும் வணிக வளர்ச்சிக்கு நல்லவொரு துவக்கமாகவும் உள்ளது என்றார்.

மேலும் பல்வேறு பிரதிநிதிகள் பேசியதாவது, கானா நாட்டில் விவசாயம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. கொக்கோ, முந்திரி, உருளைகிழங்கு போன்ற விவசாய விளைப் பொருட்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆகவே எங்களது கானா பகுதி அகில இந்திய தொழில் சங்க முதலீட்டாளர்களை அன்புடன் வரவேற்கிறது எனவும் கூறினர். கூட்டத்தில் சங்க நிர்வாகக்குழு, செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டார்கள். முடிவில் சங்க பொதுச்செயலாளர் சங்கர் மாரிமுத்து நன்றி கூறினார்.

The post தூத்துக்குடியில்

இந்தியா-கானா வர்த்தக

பரிமாற்ற கருத்தரங்கு
appeared first on Dinakaran.

Related Stories: