×

நாட்டார்மங்கலத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

பாடாலூர், ஆக. 9: ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்கள் கடந்த 15ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

முகாமில் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் கலந்து கொண்டு ஆய்வு செய்து, பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்படுவதை பார்வையிட்டார். இந்த முகாமில் 15 துறைகளில் 46 சேவைகளுக்கும் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 572 மனுக்கள் பெறப்பட்டன.

இதுவரை உரிமைத்தொகை பெறாத பெண்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து விண்ணப்பங்களை வழங்கி சென்றனர். அந்த மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காணப்படவுள்ளது. இதில் தாசில்தார்கள் முத்துக்குமரன், பாக்கியராஜ், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் வல்லபன் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கொண்டனர்.

 

Tags : Stalin ,Nattarmangalam ,Patalur ,Nattarmangalam, Alathur taluka ,Perambalur district ,Alathur taluka ,
× RELATED சிஐடியு சார்பில் மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை மனு