×

துங்கபுரம் பகுதியில் குட்கா பொருட்கள் விற்றவர் கைது

குன்னம், ஆக.9: பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் காவல் துறை நடத்திய சோதனையில் மங்களமேடு உட்கோட்டம் குன்னம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட துங்கபுரம் கிராமத்தில் பழனிவேல் மகன் சிவகுருநாதன் (40) என்பவர் தனக்கு சொந்தமான மளிகை கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்தது. அவரிடமிருந்து ஹான்ஸ் (4 கிலோ), விமல் பாக்கு (37 கிராம்), பான் மசாலா (23 கிராம்) என மொத்தம் 4.060 கிலோ கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக குன்னம் எஸ்ஐ வழக்கு பதிவு செய்து சிவகுருநானை போலீசார் கைது செய்தனர்.

 

Tags : Tungapuram ,Kunnam ,Perambalur District ,Superintendent ,Adarsh Passera ,Perambalur district… ,
× RELATED சிஐடியு சார்பில் மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை மனு