×

ஆலத்தூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பாடாலூர், ஆக.8: ஆலத்தூர் தாசில்தார் அலுவலகம் எதிரே தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், கிராம நிர்வாக அலுவலர்களின் கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக உயர்த்த வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு தேர்வுநிலை கிராம நிர்வாக அலுவலர்கள் எனவும், 20 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர்கள் எனவும் பெயர் மாற்றம் செய்து அரசாணையும், அதற்கேற்ப ஊதியமும் வழங்க வேண்டும்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசு முதன்மைச் செயலர் உத்தரவின்படி, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பட்டா மாறுதல் பரிந்துரை பெற உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை உடனடியாக செயல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் செந்தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட செய்தித் தொடர்பாளர் பாலுசாமி நன்றி கூறினார்.

 

Tags : Alathur ,Patalur ,Alathur Tahsildar ,Tamil Nadu Village Administrative Officers Association ,
× RELATED சிஐடியு சார்பில் மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை மனு