×

மத்தூர் அருகே படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை

கிருஷ்ணகிரி, டிச.4: மத்தூர் அருகே உள்ள ஆதாலியூர் கிராமத்தில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் மக்காச் சோள பயிரில் படைப்புழு தாக்குதல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு மத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் சிவநதி தலைமை வகித்தார். முகாமில், கிருஷ்ணகிரி வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) சுரேஷ், மக்காச் சோளப் பயிரில் இப்புழுவின் தாக்குதலைக் குறைக்க தயோமீதாக்சாம் 12.6 சதவீதம் மற்றும் லாம்டா சயலோத்ரின் 9.5 சதவீதம் என்ற பூச்சி மருந்தினை ஒரு ஹெக்டேருக்கு, 250 மி.லி., என்ற வீதம் பயிரிட்ட 40 முதல் 45 நாட்களில் தெளிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார். இம்முகாமில், பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை விஞ்ஞானி கோவிந்தன், படைப்புழுவின் வாழ்வியல் சுழற்சி மற்றும் அவற்றின் பாதிப்பின் தன்மையை பயிரிட்ட 15-20 நாட்களில் வேப்ப எண்ணெயை ஒரு ஹெக்டேருக்கு 2.5 லிட்டர் மற்றும் பயறு வகை பயிர்களை ஊடு பயிராக பயிரிட்டு இப்புழுவின் தாக்குதலிலிருந்து உயிரியியல் முறையில் கட்டுப்படுத்துவதைக் குறித்து விளக்கிக் கூறினார். வேளாண்மை அலுவலர் நீலகண்டன், வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் எடுத்துரைத்தார். இந்த முகாமில், துணை வேளாண்மை அலுவலர் சீனிவாசன், உதவி வேளாண்மை அலுவலர் வெங்கடேசன் மற்றும் 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

Tags : nematode infestation ,Mathur ,
× RELATED சிபிசிஎல் நிறுவன விரிவாக்கத்துக்காக...