தர்மபுரி, ஏப்.2: தர்மபுரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பிரதிவாரம் திங்கட்கிழமை தோறும், மஞ்சள் ஏலம் நடக்கிறது. இந்த ஏல மையத்தில் எவ்வித கமிஷன் இல்லாமல், சரியான கணினி எடை தராசு மூலம் எடை போட்டு விற்பனை நடைபெறுவதால், விவசாயிகள் அனைவரும் ஏலத்தில் பங்கேற்று வருகின்றனர். கடந்த ஆண்டு (2023-2024) தர்மபுரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேசிய மின்னணு வேளாண் சந்தை மூலம் நடந்த மஞ்சள் ஏலத்தில், 322 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: 322 விவசாயிகள் மூலம் 89ஆயிரத்து 914 கிலோ மஞ்சள் ஏல விற்பனைக்கு வந்துள்ளது. ₹65 லட்சத்து 68 ஆயிரத்து 704ம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு உள்ளது. இவ்வாண்டு மஞ்சள் விலை உயந்துள்ளது. விரலி மஞ்சள் குவிண்டால் அதிகபட்சமாக ₹19,808க்கும், உருண்டை மஞ்சள் குவிண்டால் அதிகபட்சமாக ₹16,769க்கும், பனங்காலி (எ)தாய் மஞ்சள் குவிண்டால் ₹27 ஆயிரத்துக்கும் விற்பனையானது. விவசாயிகள் தங்கள் மஞ்சளுக்கு நல்ல விலை கிடைப்பதால் அனைவரும் ஏலத்தில் கலந்து கொண்டு பயனடையவும். இவ்வாறு தெரிவித்தனர்.
The post 89,914 கிலோ மஞ்சள் ஏலம் appeared first on Dinakaran.