71வது பிறந்தநாளை முன்னிட்டு விஜயகாந்த் இன்று தொண்டர்களை சந்திக்கிறார்: தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 71வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். கடந்த 2006ம் ஆண்டில் இருந்து விஜயகாந்த் பிறந்த நாளை, வறுமை ஒழிப்பு தினமாக தேமுதிகவினர் கடைபிடித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ரூ.20 லட்சத்துக்கும் அதிகமாக நல திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. மேலும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., காது கேளாதோர் பள்ளிக்கு மதிய உணவு மற்றும் ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை 10.30 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்திக்க உள்ளார்.

The post 71வது பிறந்தநாளை முன்னிட்டு விஜயகாந்த் இன்று தொண்டர்களை சந்திக்கிறார்: தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது appeared first on Dinakaran.

Related Stories: