தஞ்சாவூர், செப். 7: தஞ்சையில் குருவை, சம்பா மற்றும் மாற்றுபயிர்களின் நிலை குறித்து அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சமயமூர்த்தி, மாவட்ட ஆட்சித் தலைவர்தீபக் ஜேக்கப் முன்னிலை வகித்தார். தஞ்சாவூர், ஓரத்தநாடு. திருவோணம் ஆகிய ஒன்றியங்களில் ஆற்று நீரின் மூலம் சாகுபடி செய்யப்பட்ட குருவை, சம்பா மற்றும் மாற்றுபயிர்களின் நிலை குறித்து நேரில் பார்வையிட்டார்.
தஞ்சாவூர் ஒன்றியத்தில் ராமநாதபுரம் கூடுதல் கிராமம் மற்றும் ராமநாதபுரம் நம்பர் கரம்பை ஆகிய கிராமங்களில் அரசு செயலாளர், விவசாயிகளின் மாவட்ட நிலங்களில் ஆட்சித்தலைவர் நெற்பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். பின்னர் மருங்குளம் அரசு தோட்டக்கலைத்துறை பண்ணையில் ஆய்வு செய்த அரசு செயலாளர், தோட்டக்கலை செடிகளின் இருப்பு மற்றும் அவற்றை பராமரிப்பு பணிகள் குறித்து அலுவலர்களுடன் கேட்டனர்.
மேலும் வெட்டிக்காடு கிராமத்தில் வேளாண் நெற்பயிர்களை அரசு செயலாளர், மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் பார்வையிட்டார்கள் பின்னர் ஓரத்தநாடு வட்டம் பருத்திக்கோட்டை, தென்னமநாடு, வடக்கு கிராமத்தில் குறுவை, சம்பா பயிர்களின் நிலை குறித்து நேரில் பார்வையீட்டு விவசாயிகளின் குறைகளை கேட்டார். வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை கோமதி தங்கம், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, துணை இயக்குனர்கள் சுஜாதா, பாலசரஸ்வதி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் (பொ) வெங்கட்ராமன், உதவி இயக்குனர் அய்யம்பெருமாள், கணேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post 521 லட்சம் டன் அரிசி கொள்முதல் இலக்கு தஞ்சையில் குறுவை பயிர்களை அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.