- அமைச்சர்
- செலூர் ராஜு
- விஜய்
- மதுரை
- அஇஅதிமுக
- 53வது ஆண்டு தொடக்க பொதுக்கூட்டம்
- ஓபுல பதித்துறா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
மதுரை: அதிமுக 53ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மதுரையில் உள்ள ஓபுளா படித்துறை பகுதியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, ‘‘ தமிழகத்தில் 4 படம் நல்லா ஓடினாலே போதும், நான் தான் அடுத்த முதல்வர் என பறை சாற்றுகின்றனர் சில நடிகர்கள்’’ என்றார்.
இவர் நடிகர் விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, கூட்டத்தில் மது போதையில் தொண்டர் ஒருவர், அடுத்த முதல்வர் செல்லூர் ராஜூ என கூச்சலிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அந்த நபரை உட்காருப்பா என, அமைதிப்படுத்தினார்.
The post 4 படம் ஓடினால் போதும் முதல்வராக ஆசை வருது: விஜய் மீது செல்லூர் ராஜூ தாக்கு appeared first on Dinakaran.