3 குற்றவியல் மசோதாக்கள் விரைவில் நிறைவேற்றப்படும்: அமித் ஷா உறுதி

ஐதராபாத்: ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் பயிற்சியை முடித்த ஐபிஎஸ் அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், அமித் ஷா பேசுகையில்,‘‘ஆங்கிலேயர் ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டங்களை கைவிட்டு,புதிய நம்பிக்கையுடன்,புதிய சகாப்தத்தில் நுழைகிறது. கடந்த 1850ல் உருவாக்கப்பட்ட இந்திய தண்டனை சட்டம்(ஐபிசி) என்பதற்கு பதிலாக பாரதிய நியாய சம்ஹிதா, குற்றவியல் நடைமுறை சட்டம்(சிஆர்பிசி) என்பதற்கு பதிலாக பாரதிய நாக்ரீக் சுரக் ஷா மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம்(ஐஇசி) என்பதற்கு பதிலாக பாரதிய சாக் ஷ்யா ஆகிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.புதிய சட்டங்கள் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கத்தில் உள்ளன. உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு மூன்று புதிய மசோதாக்களை ஆய்வு செய்து வருகிறது. அவை நிறைவேற்றப்படும்’’ என்றார்.

* நிலைக் குழு கூட்டம் ஒத்திவைப்பு

புதிய குற்றவியல் மசோதாக்கள் நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வில் உள்ளன. இது பற்றி ஆய்வு செய்வதற்காக நாடாளுமன்ற குழுவின் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஒன்றிய அரசின் வரைவு அறிக்கையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏற்று கொள்ளவில்லை.வரைவு அறிக்கையை படிப்பதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கால அவகாசம் கேட்டனர். இதையடுத்து, நாடாளுமன்ற குழுவின் கூட்டம் வரும் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post 3 குற்றவியல் மசோதாக்கள் விரைவில் நிறைவேற்றப்படும்: அமித் ஷா உறுதி appeared first on Dinakaran.

Related Stories: