சென்னை: எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் பரந்தாமன் புரசைவாக்கம், புளியம்தோப்பு, சூளை, சேத்துபட்டு, புதுப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்றும், பூங்கா, விளையாட்டு மைதானம் என அனைத்து இடங்களிலும் மக்களை நேரடியே சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பரந்தாமனை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி, மத்திய சென்னை எம்பி தயாநிதிமாறன் ஆகியோரும் வாக்கு சேகரித்து வருகின்றனர். நேற்று காலை எழும்பூர் காவல்நிலையம் அருகே மக்களிடம் பரந்தாமன் வாக்கு சேகரித்தார். அப்போது, மக்கள் சால்வை அணிவித்து, ஆரத்தி எடுத்து, மலர்தூவி அவரை வரவேற்றனர்.
மக்கள் குறை தீர்க்க செல்போன் செயலி: பரந்தாமன் வாக்குறுதி
