3 மையங்களில் 1,052 பேர் எழுதினர்

 

கிருஷ்ணகிரி, செப்.11: கிருஷ்ணகிரியில் 3 மையங்களில் நடந்த வட்டார கல்வி அலுவலர்களுக்கான தேர்வினை 1,052 பேர் எழுதினர். கிருஷ்ணகிரியில் நேற்று, வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான தேர்வு, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என மூன்று மையங்களில் நடந்தது. இத்தேர்வினை எழுத மொத்தம் 1,226 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தனர்.

நேற்று தேர்வை ஆயிரத்து 52பேர் எழுதினர். 174 பேர் தேர்வு எழுத வரவில்லை. இத்தேர்வை கலெக்டர் சரயு தலைமையில் வருவாய்த்துறையினர், தொடக்கக் கல்வி இணை இயக்குனர் (நிர்வாகம்) சுகன்யா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் பறக்கும்படையினர் மேற்பார்வையிட்டனர். இதையொட்டி மூன்று தேர்வு மையங்களிலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வர்களை தவிர மற்ற யாரும் தேர்வு மையங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

The post 3 மையங்களில் 1,052 பேர் எழுதினர் appeared first on Dinakaran.

Related Stories: