பெங்களூரு: கவுரிபிதனூர்-சிக்கபள்ளாபூர் இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று அமைச்சர் சுதாகர் தெரிவித்தார். சிக்கபள்ளாபூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் சுதாகர் தலைமையில் தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி வாரியம், பொதுப்பணித்துறை, சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் அமைச்சர் சுதாகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கவுரிபிதனூர்-சிக்கபள்ளாபூர் இடையிலான 56 கி.மீ. தூரம் சாலையை 30 கோடி நிதியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒப்பந்தகாரர் ஒருவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் அவர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து திட்டத்தை கைவிட்டார். இதனால் சாலை அமைக்கும் பணிகள் தற்போது வேறு ஒருவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அவர் ஜூன் மாதம் பணிகளை முடித்து கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
கவுரிபிதனூர்-சிக்கபள்ளப்பூர் இடையே தேசிய நெடுஞ்சாலை பணி விரைவில் முடியும்: அமைச்சர் சுதாகர் நம்பிக்கை
