தற்போது இந்த சாதனை சச்சின் டெண்டுல்கர் வசம் உள்ளது. கோஹ்லி தற்போது, 16,000. 17,000 என 26 ஆயிரம் வரை அவர்தான் அதிவேகமாக இந்த மைல்களை எட்டிய வீரர் என்ற சாதனையை வைத்திருக்கிறார். டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 782 இன்னிங்சில் விளையாடி 34 ஆயிரத்து 357 ரன்கள் அடித்திருக்கிறார். இலங்கை வீரர் சங்கக்கார 666 இன்னிங்ஸில் 28017 ரன், ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் 668 இன்னிங்சில் 27,483 ரன் அடித்திருக்கிறார். கோஹ்லி 591 இன்னிங்சில் 26942 ரன் எடுத்துள்ளார். மேலும் இன்னும் 152 ரன் அடித்தால் டெஸ்ட்டில் 9000 ரன்களை தொட்ட 4வது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். இதற்கு முன்பு கவாஸ்கர், சச்சின், டிராவிட் ஆகியோர் இந்த மைல் கல்லை எட்டி உள்ளார். கவாஸ்கர் 192 இன்னிங்சில் 9000 ரன் கடந்திருக்கிறார். கோஹ்லி டெஸ்ட்டில் இதுவரை 191 இன்னிங்ஸ் விளையாடுகிறார். சென்னை டெஸ்ட்டில் அவர் 152 ரன்அடித்தால் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்ய முடியும்.
The post வங்கதேசத்திற்கு எதிராக நடைபெறும் சென்னை டெஸ்ட்டில் கோஹ்லிக்கு காத்திருக்கும் 2 சாதனைகள் appeared first on Dinakaran.