வரும் 25ம் தேதி முதல் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை நிறுத்தம்: நிர்வாகம் தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் வரும் 25ம் தேதி முதல் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் சில்லரை விற்பனை விநியோகத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் ஆவின் நிறுவனம், நாள் ஒன்றுக்கு சுமார் 30 லட்சம் லிட்டர் பாலை விற்பனை செய்து வருகிறது. சென்னையில் மட்டும் 14.75 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகிறது. ஆவின் 4 வகையான பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்கிறது. அதில் பச்சை நிற பாக்கெட்டான ஆவின் கிரீன் மேஜிக் பாலில் அரை லிட்டருக்கு 4.5 கிராம் கொழுப்பு மற்றும் 3.2 கிராம் புரதம், 4.7 கிராம் மாவு சத்தும், 700 மி.கி. மினரல்களும் உள்ளன.

இதில் 74 கிலோ கலோரி அளவுக்கு சக்தி உள்ளது. ஆவினின் மொத்த விற்பனையில் 40 சதவீதம் விற்பனையாக பச்சை நிற பாக்கெட் இடம்பெற்று உள்ளது. இந்த பால் பாக்கெட் லிட்டருக்கு ரூ.44க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டிலைட் ஊதா பாக்கெட் 3.5 சதவீத கொழுப்புச் சத்துடன் ரூ.44க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே 4.5 கொழுப்பு சத்துள்ள பச்சை நிற பால் பாக்கெட்டை லிட்டருக்கு ரூ.44க்கு விற்பதால் ஆவின் நிறுவனத்துக்கு நஷ்டம் அதிகரித்துள்ளது.

சென்னை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் பச்சை நிற பால் பாக்கெட் நிறுத்தப்பட்டு விட்டன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மட்டுமே பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையாகிறது. 3.5% என்ற குறைந்த கொழுப்புச் சத்துக் கொண்ட ஆவின் டிலைட் பாலுக்கு, 4.5% கொழுப்பு சத்து கொண்ட பச்சை உறை பாலின் விலையே வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், செலவினங்களை குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்த ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதனால், பச்சை நிற பால் அட்டை வைத்திருப்பவர்கள் இருமுறை சமன்படுத்தப்பட்ட மற்றும் புல் கிரீம் பால் ஆகிய வகைகளில் ஏதாவது ஒன்றிற்கு மாற வேண்டும். பால் அட்டை கார்டுதாரர்களுக்கு டிசம்பர் 1ம் தேதி முதல் அதே விலை பால் விநியோகிக்கப்படும். டிலைட் பால் கார்டு விற்பனையை செயல்படுத்தவும், டிசம்பர் 16ம் தேதி முதல் விநியோகம் தொடங்கப்பட உள்ளது. ஆவின் பால் அட்டைகள் மூலம் ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை பால் விநியோகம் செய்கிறது. வருகிற 25ம் தேதி முதல் பச்சை நிற பால் பாக்கெட் சில்லரை விற்பனை நிறுத்தப்படும். பச்சை நிற பால் அட்டைதார்கள் டிசம்பர் 15ம் தேதி வரை பெறலாம் என ஆவின் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குநர் வினீத் கூறியதாவது: நாளொன்றுக்கு சுமார் 14.50 லட்சம் லிட்டரும் மற்றும் நாளொன்றுக்கு சுமார் ரூ.1 கோடி பால் உபபொருட்களை சுமார் 1000க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் மூலமாக விற்கப்படுகிறமு. யப்படுகிறது. இரு முறை சமன்படுத்தப்பட்ட பால் (மெஜந்தா நிறம்), சமன்படுத்தப்பட்ட பால் (நீல நிறம்), நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை நிறம்) மற்றும் நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு நிறம்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையிலும் மற்றும் அனைத்து வயதினரும் பருகும் வகையிலும் கடந்த மே மாதம் முதல் சென்னையில் விட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட டிலைட் பால் (ஊதா நிற பால் பாக்கெட்) அறிமுகம் செய்யப்பட்டு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆவின் நிர்வாகம் எல்லா காலகட்டங்களிலும் பொதுமக்கள் நலன் மற்றும் விருப்பத்தை அறிந்து செயல்பட்டு வருகிறது. எனவே மக்களின் தேவைக்கேற்ப அனைத்து ஆவின் பால் வகைகளும் எவ்வித தங்குதடையுமின்றி விநியோகம் செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆவின் பால் அட்டைகள் மூலம் ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை பால் விநியோகம் செய்கிறது. வருகிற 25ம் தேதி முதல் பச்சை நிற பால் பாக்கெட் சில்லரை விற்பனை நிறுத்தப்படும்.

The post வரும் 25ம் தேதி முதல் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை நிறுத்தம்: நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: