விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறையின் வலைதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் இவ்வாணையரகத்திலோ, தேர்வுக்குழு அலுவலகத்திலோ வழங்கப்படமாட்டாது. மேலும், அடிப்படைத்தகுதி, தரவரிசை, கலந்தாய்வு அட்டவணை மற்றும் பிற விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in என்ற வலைதள முகவரியில் தெரிந்துக்கொள்ளலாம். விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை இன்று முதல் வரும் 20ம் தேதி முடிய மாலை 5 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் தபால், கூரியர் சேவை வாயிலாக பெறவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ கடைசி நாள் வரும் 20ம் தேதி மாலை 5.30 மணி வரை ஆகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post 2023-2024ம் கல்வியாண்டிற்கான சித்த மருத்துவ மேற்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம் appeared first on Dinakaran.