திருப்பூர், ஏப். 18: திருப்பூர் பல்லடம் மற்றும் பல்லடம் ரோடு பகுதிகளில் முறைகேடாக மருந்தகங்கள், மருத்துவமனைகள், கிளினீக்குகள் செயல்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. அதன் பேரில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, உப்பிலிபாளையத்தில் அழகு மெடிக்கல் மற்றும் பல்லடம் ரோட்டில் மகாலட்சுமிநகரில் எம்.எம். மெடிக்கல் ஆகியவை முறைகேடாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து 2 மருந்தகங்களுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த அழகு மருந்தகத்தில் இருந்த இளையராஜா மற்றும் எம்.எம். மருந்தகத்தில் இருந்த அப்ஜல் ஆகியோரை ஆவணங்களுடன் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் ஆஜராகும்படி தெரிவித்தனர். அதன்படி இருவரும் இன்று (செவ்வாய்க்கிழமை) திருப்பூரில் உள்ள சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் ஆஜராக இருக்கிறார்கள்.
The post 2 மருந்தகங்களுக்கு சீல் இன்று விசாரணை appeared first on Dinakaran.