×

விவசாயிகளிடமிருந்து 1328.78 மெட்ரிக் டன் எடையுள்ள பருத்தி ₹8.48 கோடிக்கு கொள்முதல்

*18,583 விவசாயிகள் பயன்

*நேரில் பார்வையிட்ட கலெக்டர் தகவல்

திருவாரூர் : விவசாயிகளிடமிருந்து 1328.78 மெட்ரிக் டன் எடையுள்ள பருத்தி ரூ.8.48 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பருத்தி மலர்ந்த பிறகு அறுவடை செய்வது நல்லது என்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ விளக்கம் அளித்துள்ளார்.டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடியடுத்து பச்சை பயிறு மற்றும் பருத்தி பயிர், வாழை, கரும்பு, கட லை, மரவள்ளி கிழங்கு உட்பட பல்வேறு பயிர்கள் சாகுபடியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பருத்தி பயிருக்கு கடந்தாண்டில் நல்ல விலை கிடைத்ததன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் இருமடங்கு அளவில் அதாவது, 41 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிர் சாகுபடி செய்துள்ளது. பருத்தி சாகுபடி முழுவதும் தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அறுவடை செய்யப்படும் பருத்தி பஞ்சுகள் அனைத்தும் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களின் மூலமாக வியாபாரிகளை கொண்டு ஏல முறையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் ஜூன் முதல் வாரத்திலிருந்து பருத்தி மறைமுக ஏலம் நடைபெ ற்று வருகிறது. பிரதி வாரம் செவ்வாய்கிழமை காலை திருவாரூரிலும், மாலை பூந்தோட்டத்திலும், புதன்கிழமை மாலை வலங்கைமான் மற்றும் மன்னார்குடியிலும், வெள்ளிகிழமை மாலை குடவாசலிலும் அந்தந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடைபெற்ற ஏலத்தை கலெக்டர் சாரு நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது,மாவட்டத்தில் இதுவரை நடந்த பருத்தி ஏலத்தில் 1328.78 மெட்ரிக் டன் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டு ரூ.8 கோடியே 48 லட்சத்து 82 ஆயிரத்திற்கு வியாபாரிகள் கொள்முதல் செய்துள்ளனர். இதில் 18 ஆயிரத்து 583 விவசாயிகள் பயடைந்தனர்.

கடந்த வாரங்களில் அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.7,699,- குறைந்தபட்ச விலையாக ரூ.6,199, சராசரி விலையாக ரூ.6,909க்கும் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றுள்ளது. மேலும் ஏலத்தில் கலந்துகொள்ளும் விவசாயிகள் பருத்தி நன்கு மலர்ந்த பிறகு அறுவடை செய்ய வேண்டும்.3 அல்லது 4 நாட்களுக்கு ஒரு முறை பருத்தியை செடியிலிருந்து எடுக்க வேண்டும்.

பிறகு நன்றாக சுத்தம் செய்து நிறம் மாறாமல், ஈரப்பதம் இல்லாமல் நன்கு உலர்த்தி பருத்தியைக் கொண்டு வந்து அதிகபட்ச விலையில் விற்பனை செய்து பயனடையலாம். மேலும், விபரங்களுக்கு தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட பொறுப்பாளர்களை அணுகி உரிய தகவல்களை அறிந்துக்கொள்ளலாம்.

அதன்படி திருவாரூர் 9445116346, மன்னார்குடி 8072033110, வலங்கைமான் 9787961868, குடவாசல் 8946028223 மற்றும் பூந்தோட்டம் 9500751036 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.
மேலும் மாவட்ட வேளாண் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) மற்றும் திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் ஆகியோரை அணுகி விபரங்கள் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் விவசாயிகளின் பருத்தி மழையில் பாதிப்படையாத வகையில் தற்காலிக கூரைகளை முழுமையான முறையில் அமைத்து பாதுகாக்க வேண்டும். விற்பனைக்கூடத்தில் உள்ள தராசுகளை சரியான முறையில் முத்திரையிட்டு விற்பனைக்கூடத்தில் பயன்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில் வேளா ண்மை துறை இணை இயக்குநர் ஏழுமலை, துணை இயக்குநர்கள் லெட்சுமிகாந்தன் (மாநில திட்டம்), சாருமதி (வேளாண் வணிகம்), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமாஹெப்சிபாநிர்மலா, விற்பனைக்குழு செயலாளர் (பொ) மல்லிகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post விவசாயிகளிடமிருந்து 1328.78 மெட்ரிக் டன் எடையுள்ள பருத்தி ₹8.48 கோடிக்கு கொள்முதல் appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Tiruvarur ,District ,Collector ,Sarusree ,
× RELATED திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்