10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பெறும் மாணவர்களை நேரில் சந்திக்கும் நடிகர் விஜய்..!!

சென்னை: 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பெறும் மாணவர்களை நடிகர் விஜய் நேரில் சந்திக்கவுள்ளார். தொகுதி வாரியாக முதல் மூன்று இடம் பெறும் மாணவர்களை நேரில் சந்தித்து பரிசளிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். ஒவ்வொரு தொகுதியிலும், முதல் மூன்று மதிப்பெண் பெறும் 10, 12ம் வகுப்பு மாணவர்களை விஜய் சந்திக்கிறார். 234 தொகுதிகளிலும், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை சென்னை அழைத்து பரிசு வழங்க உள்ளார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, சந்திப்பு தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

The post 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பெறும் மாணவர்களை நேரில் சந்திக்கும் நடிகர் விஜய்..!! appeared first on Dinakaran.

Related Stories: