10 ஆண்டுகளில் இல்லாத வகையில் வங்கிகளின் வராக்கடன் 3.9% ஆக குறைந்தது: ரிசர்வ் வங்கி தகவல்

மும்பை: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்திய வங்கிகளின் வராக்கடன் அளவு 3.9 சதவீதமாக குறைந்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி 6 மாதங்களுக்கு ஒருமுறை என ஆண்டுக்கு இருமுறை நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையை வெளியிட்டு வருகிறது. இதன் சமீபத்திய அறிக்கை நேற்று வெளியானது. இந்த அறிக்கையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்திய வங்கிகளின் வராக்கடன் அளவு 3.9 சதவீதமாக குறைந்துள்ளது. இது 3.6 சதவீதமாக மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையின் முன்னுரையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகந்த தாஸ், வங்கிகள் மற்றும் பெரு நிறுவனங்களின் இருப்புநிலை அறிக்கைகள் வலுவாக இருப்பது வளர்ச்சிக்கான இரட்டை இருப்புநிலை சாதகமாகும் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும், நிதி ஸ்திரத்தன்மை பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல என்ற போதிலும், நிதி அமைப்பில் ஈடுபடும் அனைவரும் இதை எல்லா நேரங்களிலும் பாதுகாக்க உழைக்க வேண்டும்,’’ என்று கூறியுள்ளார்.

The post 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் வங்கிகளின் வராக்கடன் 3.9% ஆக குறைந்தது: ரிசர்வ் வங்கி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: