நீடாமங்கலம், ஆக.13: நீடாமங்கலத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 100 நாள் வேலை திட்டத்தை சுழற்சி முறையில் மற்றும் ரூ.310 தின கூலியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றிய அலுவலகம் முன் நீடாமங்கலம் ஒன்றியம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 100 நாள் வேலையை சுழற்சி முறையில் மற்றும் ரூ.310 தின கூலியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம் ஒன்றிய தலைவர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜான் கென்னடி, மாதர் சங்க மாவட்ட பொருளாளர் சுமதி ,விவசாய சங்க (பொ) ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் சண்முகவேல் மற்றும் திரளானோர் கலந்து கொண்டு கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
The post 100நாள் வேலை திட்டத்தில் ரூ.310 தினக்கூலி வழங்க வலியுறுத்தி அ.இ.வி.தொ.சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.