மயிலாடுதுறை,பிப்.14: 2024 பாராளுமன்ற தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீட்டினை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் தென்னரசு தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் மத்திய செயற்குழுக்கூட்ட முடிவின் அடிப்படையில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.
பட்டதாரி அல்லாதவரின் பதவி உயர்வை உத்தரவாதப்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும். அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கான புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள பயன்பாட்டிற்கு தகுதியற்ற வாகனங்களை நீக்கம் செய்து அவற்றிற்கு ஈடாக புதிய வாகனங்களை உடனடியாக வழங்கிட வேண்டும், 2024 பாராளுமன்ற தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீட்டினை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த வருவாய் துறை அலுவலர்,அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ஒரு நாள் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அரசு அலுவலங்களில் அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
The post 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.