10ம் வகுப்பு, 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிவகங்கை சாம்பவிகா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

சிவகங்கை, மே 20: 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மற்றும் 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது. 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 178 பேர் தேர்வெழுதி அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இப்பள்ளி மாணவி பிரதிக்ஷா 500க்கு 488மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றார். மாணவி பிரிதர்ஷினி 486மதிப்பெண், மாணவன் பாலாஜி 479 மதிப்பெண் எடுத்து அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.

இப்பள்ளி மாணவர்கள் 2பேர் 480மதிப்பெண்ணுக்கு கூடுதலாகவும், 22பேர் 450க்கும் கூடுதலான மதிப்பெண், 80பேர் 400க்கும் கூடுதலான மதிப்பெண் எடுத்து சிறந்த மதிப்பெண்கள் பெற்றவர்களாயினர். பிளஸ் ஒன் அரசு பொதுத் தேர்வில் சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 229பேர் தேர்வெழுதி அனைவரும் தேர்ச்சி பெற்றனர். சிறந்த மதிப்பெண்கள் எடுத்த மற்றும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், உறுதுணையாய் இருந்த தலைமையாசிரியர், ஆசிரியர்களை பள்ளி தாளாளார் சேகர், மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

The post 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிவகங்கை சாம்பவிகா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: