ஆத்தூரில் அனுமதியின்றி கட்டிய வணிக வளாகத்திற்கு சீல்

ஆத்தூர், அக்.31: ஆத்தூரில், அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாகத்திற்கு, உயர்நீதி மன்ற உ்த்தரவின் படி, நகரமைப்பு அலுவலர்கள் சீல் வைத்தனர்.ஆத்தூரை சேர்ந்தவர் பத்மாவதி. இவருக்கு சொந்தமான வணிக வளாகம் ஆத்தூர் கடை வீதியில் 6 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இதில் 10க்கும் மேற்பட்ட கடைகள், மேல்மாடி உள்ளது. இந்நிலையில், கட்டடத்திற்கு நகரமைப்பு அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெறவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கினை விசாரித்த நீதிபதிகள் சசிதரன் மற்றும் சுப்ரமணியன் ஆகியோர் அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாக கட்டித்திற்கு சீல் வைத்து, மின் இணைப்பை துண்டிக்க உத்தரவிட்டனர். இது குறித்த அறிக்கையை நவம்பர் 1ம்தேதி தாக்கல் செய்ய வேண்டும் என கூறினர். இதனையடுத்து நேற்று மாலை, நகராட்சி வருவாய் ஆய்வாளர் வாசுதேவன் உள்ளிட்ட நகரமைப்பு ஊழியர்கள் வணிக வளாக கட்டடத்திற்கு சீல் வைத்தனர்.

Related Stories: