போலி கன்டெய்னர் கம்பெனிகள் தொடங்கி ரூ.50 கோடி மோசடி, வெளிநாடு தப்ப முயன்ற முக்கிய குற்றவாளி கைது; மும்பை விமான நிலையத்தில் தனிப்படை அதிரடி

சென்னை: போலியான பெயரில் கன்டெய்னர் கம்பெனிகள் ஆரம்பித்து ரூ.50 கோடி வரை மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி நேற்று வெளிநாட்டிற்கு தப்ப முயன்ற போது தனிப்படை போலீசார் மும்பையில் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். பொருட்களை இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய கண்டெய்னர்களை வாடகைக்கு ஏற்பாடு செய்யுமாறு மும்பை, சென்னை பெங்களுரூ ஆகிய இடங்களில் செயல்படும் கம்பெனிகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாங்கள் கூறும் இடத்தில் இருந்து கன்டெயினர்களை வாடகைக்கு எடுத்தால் குறைந்த விலைக்கு கிடைக்கும் என கூறி ஏற்கனவே போலியாக தொடங்கிய நிறுவனத்திடம் இருந்து கன்டெய்னர்களை வாடகைக்கு எடுக்க வைத்து அதற்குண்டான பணத்தை 30 நாட்களில் செலுத்தி விடுவதாக கூறி அந்த நிறுவனத்திற்கு ஏற்கனவே தொடங்கிய வங்கி கணக்குக்கு வாடகை பணத்தை பரிமாற்றம் செய்ய வைத்து பிறகு சொன்னது போல பணத்தை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர்.

அதைப்போன்று கிண்டியில் சிட்கோ தொழிற்பேட்டையில் ெசயல்படும் நிறுவனத்திடம் ரூ.5,89,37,960 மோசடி செய்ததாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் ரகுநந்தனன் என்பவர் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தினர். ஏற்கனவே நான்கு கப்பல் நிறுவனங்கள் இவர்கள் மீது கொடுத்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் நான்கு வழக்குகள் பதிவு செய்து பொன்ராஜ், சாமுவேல் டைட்டஸ், கோகுல்நாத், டேவிட், வினோத்குமார், பேட்ரிக், சுரேஷ்குமார், பிரேம்குமார், பிரவீன், பொன்ரகு, அருள்பாலன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் பொன்ராஜ், சாமுவேல் டைட்டஸ், கோகுல்நாத், டேவிட் ஆகியோர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பொன்ரவி (34) என்பவர் மும்பை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் வெளிநாட்டிற்கு தப்ப முயற்சித்த போது விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தனிப்படையினர் மும்பை விமான நிலையம் சென்று பொன்ரவி என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டடது. மேலும் கைது செய்யப்பட்ட பொன்ரவி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

Related Stories: