மதுரை, கடலூர் வழியாக ராமேஸ்வரத்தில் இருந்து ஹைதராபாத்துக்கு சிறப்பு ரயில்: தென்னக ரயில்வே அறிவிப்பு

கடலூர்: மதுரை, கடலூர் வழியாக ராமேஸ்வரம்- ஹைதராபாத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே நிர்வாகம் விடுத்துள்ள செய்திகுறிப்பு: ராமேஸ்வரத்திலிருந்து ஹைதராபாத்திற்கு கடலூர் வழியாக சிறப்பு ரயில் வரும் 25ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ராமேஸ்வரத்தில் காலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு ஹைதராபாத்தை சென்றடையும். முன்பதிவு இரண்டாம் வகுப்பு பெட்டி 12, குளிர்சாதனப் பெட்டி முதல் வகுப்பு-1, மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டி 3, முன்பதிவில்லா பெட்டி 2 ஆகியவை இந்த ரயிலில் உள்ளது.

ராமேஸ்வரத்திலிருந்து ஆக.25 மற்றும் செப்டம்பர் மாதம் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளிலும், அக்டோபர் மாதம் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளிலும் புறப்பட்டு செல்கிறது. இந்த ரயில் மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் கன்டோன்மென்ட், காட்பாடி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, குண்டூர், மிரலயகுடா, நலங்கொண்டா மற்றும் செகந்திராபாத் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: