பங்குச் சந்தைகளில் வர்த்தகம் உயர்வுடன் தொடக்கம்

மும்பை : இன்று இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடங்கியுள்ளன. வர்த்தக நேரம் தொடங்கிய சில மணி நேரத்திலேயே, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 962 புள்ளிகள் வரை அதிகரித்து, 38 ஆயிரத்து 892 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது. இதே போல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, 242 புள்ளிகள் அதிகரித்து, 11 ஆயிரத்து 649 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.

எஸ் பேங்க், எம் மற்றும்  எம்,இண்டஸ் இண்ட் பேங்க்,டாடா ஸ்டீல்,டைட்டன், இந்தியா புல்ஸ்,ஓஎன்ஜிசி, கோடக் மகேந்திர,பஜாஜ் பைனான்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், அதானி போர்ட்ஸ், எஸ்.பி.ஐ, ரிலையன்ஸ், ஐ.ஓ.சி, ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் மாருதி ஆகிய நிறுவன பங்குகளின் விலை அதிகரித்தது. அதே சமயம்  இன்ஃபோசிஸ், டீ.சி.எஸ், டெக் மஹேந்திர, எச்.சி.எல்  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

இருப்பினும், 17வது மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வரும் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மேலும் அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தகப் போர் ஆகிய காரணங்களால் பங்குச்சந்தைகளில் ஏற்ற இறக்கம் இருக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: