மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வாகன பார்க்கிங்: போலீஸ் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை

மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் மேம்பால பணிகள் முடிந்து வெள்ளோட்டமாக வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. ஆனால் விதிமுறைகளை மீறி பலர் வாகனங்களை இயக்கி வருவதால் மேம்பாலத்தில் அவ்வப்போது சில விபத்துக்களும் நடந்து வருகின்றன. அதுபோல மேம்பாலத்திலும் வாலிபர்கள் அவ்வப்போது பைக் ரேஸ் நடத்தி வருகின்றனர். இதுபோல மேம்பாலத்தில் சொகுசு கார்களை நிறுத்திவிட்டு மது அருந்துபவர்களையும் அவ்வப்போது பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் மேம்பாலத்தின் அகலமான பகுதிகளில், பகல் வேளைகளில் பலரும் சொகுசு கார்களை  பார்க்கிங் செய்துவிட்டு செல்கின்றனர்.

ஆனால் போலீசார் இதை கண்டுகொள்வதில்லை.  இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் மேம்பாலத்தில்  தேவையில்லாத ஓவர் லோடு அதிகரித்து பாலத்தின் உறுதித்தன்மைக்கு கேடு  விளைவிக்கலாம்.மார்த்தாண்டத்தில் நிலவிவந்த கடும் போக்குவரத்து நெருக்கடியை போக்கவே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் மேம்பாலத்தை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமையாகிறது. எனவே மேம்பாலம் நீண்டநாட்கள் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில், இதுபோல விதிமுறைகளை மீறுபவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: