திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் : 18ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசிைய முன்னிட்டு, வரும் 18ம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி, முன்னேற்பாடு தொடர்பாக கோயிலில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. கோயில் துணை ஆணையர் ஜோதிலட்சுமி, ராயப்பேட்டை காவல்நிலைய உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோயில் துணை ஆணையர் ஜோதிலட்சுமி கூறியதாவது: கோயிலுக்கு வெளியே கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் பரமபதவாசல் சிறப்பு நிகழ்ச்சிகளை பக்தர்கள் கண்டுகளிக்க எல்இடி திரைகள் தென்மாட வீதியில் கோயில் நூலகத்தின் அருகிலும், கோயில் பின்பகுதியிலும் வைக்கப்படும். பக்தர்கள் வசதிக்காக சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் மற்றும் தெற்கு ரயில்வே மூலம் சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படும்.

கோயிலின் வரலாறு அடங்கிய சிற்றட்டை ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் படம் அர்ச்சனை செய்யப்பட்ட குங்குமம், கற்கண்டு, லட்டு ஆகியவை வழங்கப்படும்.

மேலும் முதியவர்கள் முன் கோபுரவாசல் வழியாக வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் காலை 8 மணி முதல் காலை 10 மணி வரையும், சீனியர் சிட்டிசன் காலை 10 மணி முதல் காலை 11 மணி வரையும், உபயதாரர்கள் மற்றும் கட்டளைதாரர்கள் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரையும் தெற்கு மாடவீதியில் அமைக்கப்பட்டுள்ள வரிசை செல்லும் வழியாக வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ேமலும்,₹300 வைகுண்ட ஏகாதசி சிறப்பு கட்டண சீட்டு வரும் 16ம் தேதி பிற்பகல் 1 மணிக்கு வழங்கப்படும். 1 நபருக்கு ஒரு சீட்டுதான் வழங்கப்படும். இந்த வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சி வரும் 19ம் தேதி முதல் 26ம் தேதி மாலை 5.30 மணிவரையும், 27ம் தேதி காலை 9 மணிக்கு பரமபதவாசல் சேவை நடைபெறும். 28ம் தேதி மாலை இயற்பா சாற்று நடைபெறும். மேலும் வைகுண்ட ஏகாதசி உற்சவ விழாவிற்கு வரும் பக்தர்கள் மெரினா கடற்கரை, லேடி விலிங்டன் கல்லூரி மற்றும் என்.கே.டி பள்ளி வளாகத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: