வட கிழக்கு பருவமழை 2 நாளில் தொடங்கும்: வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இரண்டு நாட்களில் வடகிழக்கு பருவமழை ெதாடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கேரளாவில் மழை கொட்டித் தீர்த்து பெரும்பாலான இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இந்நிலையில் கேரளா தவிர மற்ற மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்ததாக, டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதனால் தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து கொண்டு இருக்கிறது. இதற்கிடையே, அக்டோபர் 20ம் தேதி தொடங்க வேண்டிய வடகிழக்கு பருவமழை தாமதமாகும் என்று கணிக்கப்பட்டது.

ஆனால், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் அறிவித்துள்ளது. குறிப்பாக வளிமண்டல மேல் அடுக்கில் உருவான காற்று சுழற்சியால் தமிழகத்தில் சில இடங்களில் கன மழை முதல் லேசான மழையும் பெய்து வருகிறது.இது வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறியாக உள்ளது. இருப்பினும், 26ம் தேதிதான் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: