சபரிமலையில் சன்னிதானத்தை நெருங்கிய பெண்கள்; பக்தர்கள் போராட்டம்; ஐ.ஜி. ஸ்ரீஜித் பேச்சுவார்த்தை

திருவனந்தபுரம்: ஆந்திராவை சேர்ந்த செய்தியாளர் கவிதா உள்பட 2 பெண்கள் சபரிமலை சன்னிதானத்தை நெருங்கியுள்ளனர். இதற்கு எதிரப்பு தெரிவித்து சன்னிதானத்தில் பக்தர்கள் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் கேரள ஐ.ஜி. ஸ்ரீஜித் பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டத்தை கைவிட்டு அமைதியான முறையில் கலைந்து செல்ல ஐ.ஜி. வேண்டுகோள் விடுத்தார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதும் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28ம் தேதி தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்புக்கு பின் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நிலக்கல், பம்பையில்  போராட்டம் வெடித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து கோயிலுக்கு செல்வதற்காக பெண்கள் வந்து கொண்டுள்ளனர். போராட்டக்காரர்களின் கடும் எதிர்ப்பால் பெண்கள் திரும்பி செல்லும் நிலை தான் உள்ளது.

அவர்களை கட்டுப்படுத்த முயன்ற காவல்துறை வாகனம் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த செய்தியாளர் கவிதா மற்றும்  கருப்பு ஆடையுடன் இருமுடி சுமந்து கொண்டு மற்றொரு பெண்ணும் சபரிமலை சன்னிதானம் நோக்கி சென்றனர். இவர்களுக்கு ஐ.ஜி. ஸ்ரீஜித் தலைமையில் போலீஸ் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

* சபரிமலைக்கு பெண்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சன்னிதானம் முன் பக்தர்கள் முழக்கம்

* சன்னிததானத்துக்கு வெளியே பேராட்டத்தில் ஈடுபட்டுள்ள பக்தர்களுடன் ஐ.ஜி பேச்சுவார்த்தை

* பக்தர்கள் அமைதி காக்குமாறு கேரள ஐ.ஜி. ஸ்ரீஜித் வேண்டுகோள்

* போராட்டத்தை கைவிட்டு அமைதியான முறையில் கலைந்து செல்ல ஐ.ஜி. வேண்டுகோள்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: