ஆஞ்சநேயருக்கு வெண்ணைக்காப்பு அலங்காரம்

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் வெண்ணை காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் கார்த்திகை, மார்கழி, தை ஆகிய 3 மாதங்கள் கட்டளைதாரர்கள் மூலம் வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. நேற்று இரவு, ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். வெண்ணை காப்பு அலங்காரத்துக்கு 120 கிலோ வெண்ணை பயன்படுத்தப்படுகிறது. இதற்கு கட்டளைதாரர்கள் கோயில் நிர்வாகத்துக்கு 75 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்ட வெண்ணை அடுத்த நாள், பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பாக்கெட் போட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: