குத்துவிளக்கு ஏற்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

உலகம் பஞ்சபூத சக்தியான நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பால் இயங்கி வருகிறது. இதேபோல் நமது உடலும் பஞ்ச சக்தியான எலும்பு, தோல், முடி, நரம்பு, தசையால் இயங்கி வருகிறது. இதேபோல் இந்த உலகம் பஞ்ச உலோகம், பஞ்சபூத சக்தி, பஞ்ச சக்தி,  பஞ்சகிரியா சக்தி, பஞ்சமுகம் ஆகிய பஞ்ச சக்தியாலும், ஆதிசக்தி, பராசக்தி, இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி ஆகிய ஐந்து  சக்திகளாகவும் இயங்கி வருகிறது. உலகம் முழுவதும் பஞ்ச பூதங்கள் இயங்கி வருவதால் நமது முன்னோர்கள் அதை முறைப்படி வணங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விளக்கு வடிவமாக அமைத்துள்ளனர்.

இதையொட்டி கோயில்கள், வீடுகள், சுபகாரியங்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிக்கும் முதலாவது குத்து விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டு துவங்குவது காலம் காலமாக நடந்து வரும் வழக்கம். குத்துவிளக்கில் கிழக்கு முகமாக விளக்கேற்றினால் துன்பங்கள் நீங்கி வசீகரம் உண்டாகும். மேற்கு முகமாக விளக்கேற்றினால் கிரக தோஷம், பங்காளி பகை உண்டாகும். வடக்கு முகமாக விளக்கேற்றினால் கல்வி மற்றும் சுப காரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கும், திரண்ட செல்வம் உண்டு.

தெற்கு முகமாக விளக்கேற்றினால் அபசகுனம், பெரும் பாவம் உண்டாகும். குத்து விளக்கில் ஒரு முகம்  ஏற்றினால் மத்திம பலனாக இருக்கும், இருமுகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமையுடன் இருக்கும், மும்முகம் ஏற்றினால் புத்திர சுகம், கல்வி  கேள்விகளில் விருத்தியாகும், நான்கு முகம் ஏற்றினால் சர்வ பீடை நிவர்த்தி, ஐஸ்வர்ய லக்ஷ்மி கடாட்சம் ஆகியவை பெருகும் என்பது  ஐதீகமாகும். இதேபோல் தாமரை தண்டில் திரியால் தீபமேற்றினால் மூன்று ஜென்ம பாவங்கள் போகும். வாழைத்தண்டு நூல் திரியால் தீபமேற்றினால்  குலதெய்வக் குற்றம், சாபம் நீங்கும். புது மஞ்சள் சேலை துண்டு திரியால் தீபமேற்றினால் தாம்பத்ய தகராறு நீங்கும்.

புதுவெள்ளை வஸ்திரத்தில் பன்னீரை விட்டு உலர விட்டு திரியால் தீபமேற்றினால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறையும். நெய்விளக்கு ஏற்றினால்  லட்சுமி வாசம் செய்வாள். இலுப்பை எண்ணெயால் விளக்கேற்றினால் பூஜிப்பவருக்கும், பூஜிக்கப்படும் இடத்துக்கும் விருத்தியுண்டாகும். விளக்கெண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் துன்பங்கள் விலகும்.

Related Stories: