×

₹15.84 கோடியில் புயல் பாதுகாப்பு மையம் வேளாங்கண்ணி பேராலய ஆண்டு விழாவையொட்டி 2 தாலுகாவிற்கு 29ம்தேதி உள்ளூர் விடுமுறை

நாகப்பட்டினம்,ஆக.26: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு வரும் 29ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2 தாலுகாவிற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. அன்னையின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 29ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8ம் தேதி வரை 10 நாட்கள் ஆண்டு பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

இதன்படி இந்தாண்டு விழா வரும் 29ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மறுநாள்(30ம் தேதி) நவநாள்தொடங்குகிறது. இதை முன்னிட்டு நவநாள்களில் அதாவது 30ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 7ம் தேதி வரை வேளாங்கண்ணி பேராலயம், விண்மீன் ஆலயம், பேராலயம் மேல்கோவில், பேராலயம் கீழ்கோவில் ஆகிய இடங்களில் காலை முதல் மாலை வரை தமிழ், தெலுங்கு, கொங்கனி, மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திருப்பலி நடைபெறும்.

செப்டம்பர் மாதம் 6ம் தேதி மாலை 3 மணிக்கு கொங்கனி மொழியில் சிலுவைப்பாதை, 4 மணிக்கு தமிழ்மொழியில் சிலுவைப்பாதை, 5 மணிக்கு ஆங்கில மொழியில் சிலுவைப்பாதை, 6 மணிக்கு மராத்திய மொழியில் சிலுவைப்பாதை நடைபெறும். இவ்வாறு தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் நவநாள் விழாவில் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு, நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம், வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகம், காவல்துறை மற்றும் அனைத்து அரசுத்துறைகள், வேளாங்கண்ணி பேராலயம் நிர்வாகம் ஆகியவை இணைந்து பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துள்ளது.

இந்நிலையில் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆண்டு திருவிழாவை முன்னிட்டு வரும் 28ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 9ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழகம் குடந்தைகோட்ட நிர்வாக அலுவலர் பொன்முடி அறிவித்துள்ளார். இந்தாண்டு கூடுதலாக யாத்ரீகர்கள் வருகை தருவார்கள் காவல்துறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் எதிர்பார்க்கிறது. இதனால் நாகப்பட்டினம் மற்றும் கீழ்வேளுர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை விடுப்படுவதாக கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

இதில் புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழா தொடக்க நாளான வரும் 29ம் தேதி கொடியேற்ற விழாவின் போது லட்ச கணக்கில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு நாகப்பட்டினம் மற்றும் கீழ்வேளூர் தாலுகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் (தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) விடுமுறை அளிக்கப்படுகிறது.

மேற்படி 29ம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு செப்டம்பர் மாதம் 21ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

The post ₹15.84 கோடியில் புயல் பாதுகாப்பு மையம் வேளாங்கண்ணி பேராலய ஆண்டு விழாவையொட்டி 2 தாலுகாவிற்கு 29ம்தேதி உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Storm Protection Center ,Velankanni Cathedral Anniversary ,Nagapattinam ,Collector ,Akash ,Velankanni ,Arogya Annai Paralaya ,
× RELATED நாகப்பட்டினத்தில் பெரியார் பிறந்தநாள் விழா